மாணாக்கர் சேர்க்கை (2022-2023)
(பல்கலைக்கழகத் துறைகளில் நடைபெறும் பாடப்பிரிவுகளுக்கு மட்டும்)
கேள்விகள் - பதில்கள்
Frequently Asked Questions (FAQ)
- பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இந்தக் கல்வியாண்டு நடத்தப்படும் பாடத்திட்டங்கள் குறித்து எவ்வாறு அறிந்து கொள்வது?
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இந்தக் கல்வியாண்டு நடத்தப்படும் பாடத்திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்யவும். ஒவ்வொரு பாடத்திட்டத்தையும் கிளிக் செய்து அதற்கான கல்வித் தகுதி, கால அளவு, தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி, எண்கள், கட்டணம் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் இந்த இணைப்பில் தரப்பட்டுள்ள தகவல்களை கவனமாகவும் முழுமையாகவும் படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சேர்க்கைக்கான தகுதி குறித்து முழுமையாக அறிந்து கொண்ட பின்னரே விண்ணப்பத்தை நிறைவு செய்யும் பணியைத் தொடங்க வேண்டும். - நான் தவறுதலாக எனது மதிப்பெண் பட்டியலுக்கு / சாதிச் சான்றிதழுக்கு பதிலாக வேறு ஒன்றை பதிவேற்றி உள்ளேன். அதை மாற்ற இயலுமா ?
நீங்கள் லாகின் செய்த பிறகு, submitted applications என்கிற இணைப்பில் உள்ள 'Delete / Re-Upload a Certificate' என்கிற இணைப்பைக் கிளிக் செய்து தவறாகப் பதிவேற்றப்பட்ட சான்றிதழை நீக்கலாம். பின்னர் Upload Certificates என்கிற இணைப்பில் சென்று புதிதாகப் பதிவேற்றலாம். - சேர்க்கைக்கான விண்ணப்பங்களை எவ்வாறு பெறுவது ? பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை எவ்வாறு பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவது ?
சேர்க்கைக்கான இணைய தளத்தில் விண்ணப்பங்களை இணைய வழியாக நிரப்பி, சமர்ப்பிக்க இயலும். அவ்வாறு நீங்கள் சமர்ப்பித்த விண்ணப்பங்கள் நீங்கள் சேர்க்கை பெற விரும்பும் கல்வித் திட்டத்தை வழங்கும் துறைக்கு நேரடியாக இணையம் மூலம் சென்று சேர்ந்து விடும். விண்ணப்பப்படிவத்தை பிரிண்ட் எடுத்து அனுப்ப வேண்டாம்(There is no need to send the printed application to the University.)இணையம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் முறையின் படி நிலைகளை அறிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்யவும். - சேர்க்கைக்கான கல்வித் தகுதியை எவ்வாறு அறிந்து கொள்வது ?
கல்வித் தகுதி மற்றும் பிற தகவல்களை தகவல் தொகுப்பேடு / கையேட்டின் (Prospectus) மூலம் அறிந்து கொள்ளலாம். அதைப் பார்க்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும். - சேர்க்கைக்கான விண்ணப்பங்களை எவ்வாறு பெறுவது ? பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை எவ்வாறு பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவது ?
சேர்க்கைக்கான இணைய தளத்தில் விண்ணப்பங்களை இணைய வழியாக நிரப்பி, சமர்ப்பிக்க இயலும். அவ்வாறு நீங்கள் சமர்ப்பித்த விண்ணப்பங்கள் நீங்கள் சேர்க்கை பெற விரும்பும் கல்வித் திட்டத்தை வழங்கும் துறைக்கு நேரடியாக இணையம் மூலம் சென்று சேர்ந்து விடும். விண்ணப்பப்படிவத்தை பிரிண்ட் எடுத்து அனுப்ப வேண்டாம்(There is no need to send the printed application to the University.)இணையம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் முறையின் படி நிலைகளை அறிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்யவும். - இணையம் மூலம் விண்ணப்பிக்கும் பணிக்குத் தேவையான தகவல்கள் குறித்து எவ்வாறு அறிந்து கொள்வது ?
இணையம் மூலம் விண்ணப்பிக்கும் பணிக்கு, உங்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை அறிந்துகொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்யவும். - இணையம் மூலம் விண்ணப்பிக்கும் பணிக்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்கள் குறித்து எவ்வாறு அறிந்து கொள்வது ?
நீங்கள் தயாராக வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களின் பட்டியலைப் பார்க்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும். -
விண்ணப்பங்களை இணையம் மூலமாகவே நிரப்பி, சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் குறித்து எவ்வாறு அறிந்து கொள்வது ?
இந்த இணைப்பை கிளிக் செய்து "Important Dates" என்கிற பெட்டியில் பார்க்கவும்.- விண்ணப்பக் கட்டணம் குறித்து எவ்வாறு அறிந்து கொள்வது ?
இந்த இணைப்பை கிளிக் செய்து "Application Fees" என்கிற பெட்டியில் பார்க்கவும்.- ஒன்றுக்கு மேற்பட்ட கல்வித்திட்டங்களுக்கு நான் விண்ணப்பிக்கலாமா ?
விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் தனித்தனியே விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டும்.- நான் ஒரு முதுநிலை கல்வித்திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புகிறேன். நான் தற்போது இளநிலை மூன்றாமாண்டு பயின்று வருகிறேன். என்னிடம் 5/4 பருவத் தேர்வுகளுக்கான (Semester) மதிப்பெண் பட்டியல் அல்லது இணைய தளத்தில் வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளின் (Result Copy) பிரிண்ட் அவுட் / அல்லது அல்பருவம் (Non-Semester) முறையில் பயில்வதால் இரண்டாமாண்டு மதிப்பெண் பட்டியல் மட்டுமே உள்ளது. நான் எவ்வாறு விண்ணப்பத்தை நிறைவு செய்வது ?
நீங்கள் தேர்வு முடிவுகளுக்காக காத்திருப்பவராக இருப்பின், ஐந்து பருவத் தேர்வுகளின் மதிப்பெண் பட்டியல் அல்லது இணையத்தில் வெளியிடப்பட தேர்வு முடிவுகள் / இரண்டாமாண்டு மதிப்பெண் பட்டியல் (அல்பருவம் (Non-Semester) முறையில் பயில்பவர்களுக்கு மட்டும்) போன்றவை உங்களிடம் இருந்தால், அவற்றை நீங்கள் ஒரே கோப்பாக (single file) மாற்றி PDF வடிவில் பதிவேற்றலாம்.- நான் என்னுடைய மாற்றுச் சான்றிதழை (TC) எனது கல்லூரியில்/பள்ளியில் இருந்து இதுவரை பெறவில்லை. அதை எவ்வாறு பதிவேற்றம் செய்ய முடியும் ?
உங்களுக்கு இன்னும் மாற்றுச் சான்றிதழ் (TC) தரப்படவில்லை என்றால், அதை தற்போது பதிவேற்றவேண்டிய தேவை இல்லை.- பூர்த்தி செய்து சமர்ப்பித்த விண்ணப்பதில் உள்ள தகவல்களை என்னால் மாற்ற முடியுமா ? அவ்வாறு செய்ய முடியும் என்றால் எல்லாத் தகவல்களையும் மாற்ற இயலுமா ?
முடியும். Login / Sign In செய்து, பின்னர் அதில் உள்ள dashboard என்கிற இணைப்பில் நீங்கள் சமர்ப்பித்த விண்ணப்பம் குறித்த தகவல்களைக் காணலாம். அதன் அருகேவுள்ள edit பொத்தானை அழுத்தி, தகவல்களை மாற்றம் செய்யலாம். பின்வரும் தகவல்களைத் தவிர பிற தகவல்களை மாற்றம் செய்ய இயலும்.
1. விண்ணப்பித்த கல்வித்திட்டம் மற்றும் பாடம்
2. விண்ணப்பக் கட்டணம்- விண்ணப்பத்தை நிறைவு செய்து சமர்ப்பிக்கும் காலம் முடிந்த பின்னும் நான் எனது விண்ணப்பத்தில் மாற்றங்கள் செய்ய முடியுமா?
விண்ணப்பத்தை நிறைவு செய்து சமர்ப்பிக்கும் காலம் முடிந்த பின்னர் விண்ணப்பத்தில் மாற்றங்கள் செய்ய முடியாது. ஆனால் கேட்கப்பட்டுள்ள சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவும், புதிய சான்றிதழ்களை சேர்க்கவும் முடியும்.- நான் ஏற்கனவே மூன்றாம் / நான்காம் / ஐந்தாம் பருவத் தேர்வு (Semester) மதிப்பெண் பட்டியல்களைப் பதிவேற்றிவிட்டேன். இப்போது எனது ஆறாம் பருவத் தேர்வு மதிப்பெண் பட்டியலைப் பெற்றுள்ளேன். அதைப் பதிவேற்ற முடியுமா ?
பதிவேற்ற முடியும். login செய்த பிறகு ‘Additional Documents’ என்பதை கிளிக் செய்து நீங்கள் புதிய பட்டியலைப் பதிவேற்றலாம். வேறு ஏதேனும் சான்றிதழ்களை நீங்கள் பதிவேற்ற விரும்பினாலும் செய்யலாம்.- நான் ஒரு பாடத்திட்டத்திற்கு (programme / course) விண்ணப்பம் செய்து முடித்து விட்டேன். இப்போது வேறு ஒரு பாடத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புகிறேன். நான் ஏற்கனவே சமர்ப்பித்த விண்ணப்பத்தை மாற்ற முடியமா?
அவ்வாறு செய்ய இயலாது. விண்ணப்பித்த கல்வித்திட்டம் மற்றும் பாடத்தை மாற்ற இயலாது. நீங்கள் வேறு ஒரு கல்வித்திட்டம் மற்றும் பாடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பினால், ஒரு புதிய விண்ணைப்பத்தை நிறைவு செய்து சமர்பிக்க வேண்டும். அதற்கு தனியாக விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். ஏற்கனவே செலுத்திய விண்ணப்பக் கட்டணத்தை மறுபடி உள்ளிட முடியாது.விண்ணப்பத்தை நிறைவு செய்யும் பணி தொடர்பான கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு admissions@bdu.ac.in என்கிற மின்னஞ்சலைத் தொடர்பு கொள்ளவும்.
பிற தகவல்களுக்கு, அந்த துறையை நேரடியாகத் தொடர்பு கொள்ளவும். இந்த இணைப்பைப் பார்க்கவும்.- What are the programmes / courses offered by Bharathidasan University in this academic year?
Click here to See the List of Programmes / Courses Offered. Click on the programme name to know the details about the duration, eligibility, contact details and fee particulars for each programme. Applicants are requested to read the details such as fee, eligibility, duration, etc., carefully and completely before starting the application submission process. - Instead of uploading my community ceritificate / mark statement, I have uploaded a wrong document by mistake. Can I change that now?
Yes. After login to the portal, you can see the 'submitted applications' link. That link will show a purple color button 'Delete / Re-Upload a Certificate'. By using this you can delete the old file and by clicking on the 'Upload Certificates' you can upload the proper document. - What are the eligibility requirements for admission to programmes / courses?
Click here to see the prospectus. All the information pertaining to the courses / programmes are available in the prospectus document. - How to apply, how to send the filled-in application to the University and from where do I get the application?
Application submission is through online only. The Admissions Portal enables submission of online application. The submitted applications will be accessed by the respective departments directly. There is no need to send the printed application to the University.
To know the Steps / Procedures in the Online Application Submission Process, click here. - What are the requirements for Online Application Submission?
Click here to see the instructions before starting your online submission. - What are the necessary documents required to submit the application?
Click here to see the list of required documents. - When is the last date to submit the application?
Click this link and see the box with the title "Important Dates".- Where can I find the details about Application Fee?
Click this link and see the box with the title "Application Fees".- Can I apply for more than one Programme ?
Yes, You can. But for each application, application fee has to be paid separately.- I wish to apply for a PG programme. I am currently doing my Undergraduation ( UG Final Year). I have only 5/4 semester mark statements / online result copy print outs / II Year Mark Statements (Non-Semester). How can I complete the application submission ?
Applicants who are awiting results can enter the marks upto 5 semsters / II year mark statment (for non-semester students only). They can upload the scanned mark statements or online result copies upto 5 semesters as a single PDF file.- I have not obtained my Transfer Certificate (TC) from my Institution. How can I upload the TC then?
There is no need to upload the TC during the application submission if you have not obtained it. The TC can be uploaded after obtaining it from the school/college.- Can I edit the submitted application?
Yes. You can edit the application by login to the portal by using the 'Login / Sign In' link. The portal has a link called 'Dashboard' which shows the details about the application submitted by you. In that page, you can start editing the details in your application by clicking on the button 'Edit'. You can edit all the information in the application except the following.
1. Programme / Course & Subject Applied for
2. Application Fee Details- Can I edit my details after the last date for application submission?
No. You can not edit the application after the last date for application submission. But you can add / upload other necessary documents & additional documents.- I have already uploaded my third / fourth / fifth semester mark statements. Now I have obtained my sixth semester mark statement too. Can I upload that?
Yes, You can upload that. By login to the applicant’s portal you can upload your mark statement or any other additional document by clicking on the ‘Additional Documents’ button.- I have applied for the one programme. Now I would like to change the programme. Is this possible ?
No. As mentioned earlier, it is not possible to change the programme once the application has been submitted. If you want to apply for a different programme, a new application has to be submitted. For that, a seperate / new online application fee payment has to be made.- Send an email to admissions@bdu.ac.in for technical help and support.
For other information, contact the department that offers the programme you have applied for directly. Click on this link to know the contact details. - Where can I find the details about Application Fee?
- விண்ணப்பக் கட்டணம் குறித்து எவ்வாறு அறிந்து கொள்வது ?
தளத்தின் சிறந்த பயன்பாட்டிற்கு Firefox, Edge, Chrome 20+ Browser இல் 1024 x 768 பிக்சல்கள் பரிந்துரைக்கபடுகிறது. Java Script இயக்கப்பட்டிருக்க வேண்டும்.
© 2023 Powered by University Informatics Centre, Bharathidasan University, Tiruchirappalli